மாணவர்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ அமைப்புகள், கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.  பொள்ளாச்சி கோவை சாலையில் காந்திசிலை முன்பாக தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காந்திசிலையில் இருந்து தொடங்கிய மனித சங்கிலி கோவை சாலையில் மகாலிங்கபுரம் வரை நீடித்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மெரினா புரட்சி வெடிக்கும்:  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலையரசன் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, ‘‘உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்காவிட்டால், மீண்டும் ஒரு மெரினா புரட்சி தமிழகத்தில் வெடிக்கும்’’ என்று அரசை மாணவர்கள் எச்சரித்தனர்.இதேபோல், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம்  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டம் வேளூர் தண்டலைச்சேரியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி  ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் காஞ்சிபுரம் வக்கீல்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டமும் டந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: