அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை எதிரொலி மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை

திருவொற்றியூர்: மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமையாசிரியர் மாணவ-மாணவியர்களை தரைகுறைவாக பேசுவதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று பெற்றோர்கள்  நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு முன் ஒன்று கூடினர். அங்கு தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணலி புதுநகர் போலீசார் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் கல்வி துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி சாம்பசிவம் மீஞ்சூர் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் ஆசிர்வாதம், துலுக்காணம் ஆகியோர் நேற்று காலை ஆண்டார்குப்பம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். அங்கு தலைமை ஆசிரியர் காந்திமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு குடியிருந்த பெற்றோர்கள் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் தலைமையாசிரியர் காந்திமதி உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோர்களிடம் கூறி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: