நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேர்தல் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க குற்ற பின்னணி உள்ள நபர்கள், கொலை குற்றவாளிகள், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குள் தனியார் பாதுகாப்பு நிறுவனம் உட்பட 2,709 பேர் துப்பாக்கி உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடை முறை அமலுக்கு வந்ததையொட்டி  துப்பாக்கி உரிமம் பெற்ற சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: