ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க தவறினால், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என  அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த பிப்., 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, ஆதில் என்ற தீவிரவாதி 350 கிலோ எடை  கொண்ட வெடி பொருட்களுடன் வந்த காரை, சிஆர்பிஎப் வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 40வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக  அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பை நடத்த உள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் வசித்துவரும்  மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்,  பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கான ஓட்டெடுப்பு ஐநா கவுன்சிலில் நடைபெறவுள்ள நிலையில், மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே சர்வதேச  தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: