மியாட் மருத்துவமனையில் 2 நாள் நடக்கிறது தோள்பட்டை, மூட்டு அறுவை சிகிச்சை குறித்து கருத்தரங்கம்: பிரிட்டிஷ் துணை தூதர் பங்கேற்பு

சென்னை: மியாட் மருத்துவமனையில் தோள்பட்டை, முழங்கை, மூட்டு அறுவை சிகிச்சை குறித்த 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது.  இதில் பிரிட்டிஷ் துணை தூதர் பங்கேற்றார்.  இந்தோ-பிரிட்டிஷ் ஹெல்த் இனிசியேட்டிவ், பிரிட்டிஷ் எல்ஃபோ அண்டு சோல்டர் சொசைட்டி மற்றும் சோல்டர் அண்டு எல்ஃபோ சொசைட்டி ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும்  “எல்ஃபோ என்க்ளேவ் 2019” என்ற  2 நாள் கருத்தரங்கம் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கிற்கு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்திவி மோகன்தாஸ் தலைமை வகித்தார். பிரிட்டிஷ்  தோள் பட்டை மற்றும் முழங்கை சங்கத்தின் தலைவர் பீட்டர் பிரவுன்சன், இந்திய தோள் பட்டை மற்றும் முழங்கை சங்கத்தின் தலைவர் ராம்சிதம்பரம் முன்னிலை வகித்தனர்.

 பிரிட்டிஷ் துணை தூதர் ஜெர்மி பில்மோர் பெட்போர்டு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடக்கி வைத்து தோள் பட்டை மற்றும் முழங்கை, மூட்டு  அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த நூலை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “பிரிட்டிஷ் சோல்டர், முழங்கை அறுவை சிகிச்சை குறித்த இந்த கருத்தரங்கம் இந்தியாவில் முதல்முறையாக மியாட் மருத்துவமனையில் நடப்பதில் பெருமை. பிரிட்டிஷ் மருத்துவர்களும், இந்திய மருத்துவர்களும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கின் மூலம்  நோயாளிகள் பயன் அடைவார்கள்’’ என்றார்.  மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்திவி மோகன்தாஸ் பேசும்போது,  “இந்த அறுவை சிகிச்சையில்  சிறந்து விளங்கும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து விளக்கமாக பேசுவார்கள். தோள் பட்டை மற்றும் முழங்கை அறுவை சிகிச்சைகளை நேரடியாக திரையில் காண்பிப்பார்கள். இந்த கருத்தரங்கம் இளம் மருத்துவர்களுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.

கருத்தரங்கில் டாக்டர் ராம்சிதம்பரத்திற்கு பிரிட்டிஷ் அரசு சார்பாக தங்கப்பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது. இந்தியா மற்றும்  வெளிநாடுகளில் உள்ள  பிரசித்தி பெற்ற 350க்கும் மேற்பட்ட  முழங்கை மற்றும் தோள்பட்டை மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். இன்று 2வது நாளாக நடக்கும் கருத்தரங்கில் விரிவுரைகள், தொகுப்பளிப்புகள்,  தோள் பட்டை, மூட்டு விலகல் சரிசெய்தல், முழங்கை முறிவு பொருத்துதல், உடைந்த பகுதியில் ஸ்குரு பொருத்துதல் போன்றவைகள் செயல் விளக்கத்துடன் அறுவை சிசிச்சை மூலம் திரையில் காண்பிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: