சூறைக்காற்றுடன் பலத்த மழை : வாசுதேவநல்லூர் அருகே 2 ஆயிரம் வாழைகள் சேதம்

சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுமார் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

வாசுதேவநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 3 மணி நேரம் பலத்த சூறைக்காற்றுடன் கனத்த மழை பெய்தது. இதனால் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள சங்கனாப்பேரியில் சில மரங்கள் சாய்ந்து விழுந்ததோடு அங்கு பயிரிடப்பட்டு குலை தள்ளி நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரம் வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது.

இதில் சங்கனாப்பேரியைச் சேர்ந்த காந்திமதி என்பவருக்குச் சொந்தமான சுமார் 1300 வாழைகளும், பிரசாந்த் என்பவரது சுமார் 500 வாழைகளும், பிரான்சிஸ் என்பவரது சுமார் 200 வாழைகளும் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தன. சேதமதிப்பு ரூ.பல லட்சம் ஆகும். பாதிக்கப்பட்ட பகுதிகளை வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் சிவனுப்பாண்டியன், கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கனாப்பேரி முருகானந்தம், நாரணபுரம் வீரசேகரன், கிராம உதவியாளர்கள் கருணாலய பாண்டியன், அற்புதமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: