ஆகாஷ் மருத்துவமனையில் 500 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை

கீழ்ப்பாக்கம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சர்வதேச பாலியல் மருத்துவர்கள் சங்கமீடியா குழு தலைவர் டாக்டர் ஜெயராணி  காமராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்த  முடியும். பாதிக்கப்பட்ட பெண்கள் அடிக்கடி சிறுசிறு பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

முன்னதாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக  புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தசோகைக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: