பெருங்காமநல்லூரில் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு நினைவு மண்டபம் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : சுதந்திர போராட்டத்தில் இன்னுயிரை நீத்த  பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் 1920ம் ஆண்டில் ஆங்கிலேயர் அதிகாரித்தை எதிர்த்து போராடியதால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர் பலர் காயம் அடைந்தனர். அதில் இன்னுயிரை நீத்த  வீரர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் உயிர் நீத்த 16 வீரர்களை கவுரவிக்கும் வகையிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 1920ம் ஆண்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கில ஆட்சியாளர்கள் எதேச்சி அதிகாரத்தை எதிர்த்து பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் போராடினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆங்கிலேய அரசு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். அந்த 16 பேரை கவுரவிக்கும் வகையிலும் அப்போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும் அங்கு தமிழக அரசால் நினைவு மண்டபம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: