2018-19ம் நிதியாண்டில் 11,513 கோடி இலக்கை அடைய கவனம் செலுத்த வேண்டும்: துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான  11,513 கோடியை முழுமையாக அடைவதற்கு முழு கவனம் செலுத்த  அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டுள்ளர். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில்   பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து நேற்று பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சீராய்வுக் கூட்டம் நடந்தது.  வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர், பதிவுத்துறைத் தலைவர், அனைத்து கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மண்டல துணைத்தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 11 ஆயிரத்து 513 கோடியை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். ஆவணங்கள் பதிவு நாளன்று திரும்ப வழங்கியுள்ளனரா என்பது  குறித்து அமைச்சர் சீராய்வு செய்தார். சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: