எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎப் வீரரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பாதுகாப்புக்காக ரயில் நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் விஜயகுமார் பணியில் ஈடுபட்டிருந்தார். ேநற்று காலை பணி முடிந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல்நிலையத்தில் தனது துப்பாக்கியை அதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி விசையில் செல்வராஜின் கை தவறுதலாக பட்டுள்ளது. இதில், துப்பாக்கி வெடித்து தோட்டா காவல் நிலையத்தின் மேல் கூரையை துளைத்தது. சத்தம் கேட்டு போலீசார்,   பயணிகள் அலறியடித்து  ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: