மகா சிவராத்திரி விழா கோலாகலம்....... விடிய விடிய சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு சிவ ஆலயங்களில், சிறப்பு பூஜை, தீபாராதனைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. அதே போல மேலும் பல சிவ ஆலயங்களிலும் விடிய விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவாணைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, வழிபாடுகள் நடைபெற்றன.

கோவையில் ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றள்ளனர். அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலதரப்பினரும் இரவு முழுவதும் விழித்திருந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். விடிய விடிய ஆடல்பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் கலைஞர்கள் நெருப்பில் செய்த வீரதீர சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: