இனி 5 ஆண்டு குடும்ப சொத்துக்கணக்கு காட்ட வேண்டும் கிடுக்கிப்பிடி போடும் தேர்தல் கமிஷன்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிர்பாராத கெடுபிடிகள் காத்திருக்கின்றன. எப்படியும் தப்ப முடியாத அளவுக்கு புதிதாக சில கிடுக்கிப்பிடி விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் இதுவரை, தங்கள் சொத்துக் கணக்கை, வேட்புமனுவுடன் இணைக்கும் வாக்குமூல இணைப்பில் சேர்த்துவிடுவர். முந்தைய ஆண்டு தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கை அடிப்படையாக வைத்து சொத்தை காட்டினால் போதும். இனி மக்களவை ேதர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படும். வேட்புமனுவுடன் விண்ணப்பம் 26ன் படி, சொத்துக்கணக்கை விரிவாக காட்ட வேண்டும்.  அதாவது, வேட்பாளர், அவர் மனைவி, மகன், மகள்களில் ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள  அனைவர் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துக்கள், உள்நாடு, வெளிநாட்டில் உள்ள  முதலீடுகள், டெபாசிட்களை காட்ட வேண்டும். இதில் இன்னொரு விதி, பான் நம்பரை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வேட்பாளரின் பான் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரின் பான் எண்ணும் குறிப்பிட வேண்டும்.

வங்கிக் கணக்குகளும் குறிப்பிட வேண்டும். பான் எண் இல்லாதவர்கள் குடும்பத்தில் இருந்தால் பான் இல்லை என்று குறிப்பிட வேண்டும். இப்படி கிடுக்கிப்பிடி விதிகளை போட்டுள்ள தேர்தல் கமிஷன் தன் சட்ட விதிகளில் திருத்தங்களையும் செய்து விட்டது. வரும் மக்களவை தேர்தலில் இந்த விதிகள் அமலுக்கு வரும். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகம், புதுவையில் 55 பெண்கள் உட்பட மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 748 பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, தோற்றவர்களின் சொத்துக்கணக்கை வருமான வரித்துறை இந்த கிடுக்கிப்பிடி விதிகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து எதிர்காலத்தில் கண்காணிக்கும் என்பதும் கூடுதல் தகவல். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் பலன் தருமா? இதோ நான்கு பேர் அலசல்:

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: