சந்துருக்கு பதில் சச்சின் படத்தால் குழப்பம் ஸ்மார்ட்கார்டு பிழைகள் மெஷின் மூலம் திருத்தம்: அரசு தரப்பில் ஏற்பாடு

திண்டுக்கல்: ஸ்மார்ட் கார்டுகளில் புதிய மெஷின்கள் மூலம் பிழை திருத்தம் செய்யப்படுமென அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன்  கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் முறை கேடுகளை தடுப்பதற்காக ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.  இதிலும் பெயர், முகவரி உள்பட பல்வேறு குளறுபடிகள்  ஏற்பட்டன. இவற்றை கார்டுதாரர்களே ஆன்லைனில் திருத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. கார்டுதாரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு திருத்தங்களை செய்து  கொண்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வழங்கல்  அலுவலர்களே பிழைகளை திருத்தம் செய்வதற்கு வசதியாக, ரூ.10 லட்சம் மதிப்பில்  புதிய இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து  அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் கார்டு வழங்கும்போது கார்டுதாரர்களே  பிழைகளை திருத்தம் செய்ய அனுமதி வழங்கினோம். ஆனால் அவர்கள் சினிமா  நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரின் பெயர்களையும்,  படங்களையும் போட்டு குளறுபடியை அதிகப்படுத்தி விட்டனர். இதனால்தான்  கார்டுகளில் பிழை திருத்தம் உரிமத்தை ரத்து செய்தோம். தற்போது புதிய மெஷின்கள்  வரவுள்ளன. இதன்மூலம் ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு விரைவில் பிழைகள்  திருத்தி தரப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: