அரசு கலைக்கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு தலா 2 லட்சம் வசூல்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 540 கவுரவ விரிவுரையாளர்களில் 200 பேரிடம் தலா 2 லட்சம் பணம் பெற்றுள்ளதாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் 91 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகள், 2018-19ம் கல்வியாண்டு அதிகரித்த மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றால் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளது.  இந்நிலையில், உதவி பேராசிரியர் நியமிப்பதற்கு பதிலாக, கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிரவல் மூலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, புதிதாக நியமிக்கப்பட உள்ள 540 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைேகடு நடைபெறுவதாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது:

பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) விதிகளின்படி, உதவி பேராசிரியர், கவுரவ விரிவுரையாளர் என இரு பணிகளுக்கும் ஒரே கல்வித்தகுதிதான். செட்/நெட்/ பி.எச்டி (2009 விதிமுறைகளின்படி) முடித்திருக்க வேண்டும். புதிதாக நியமிக்கப்படவுள்ள உள்ள 540 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் 200 இடங்களுக்கு தலா 2 லட்சம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் தனியார் கல்லூரிகளில் பணியாற்றியவர்கள். குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வித்தகுதியும் பெறவில்லை. இது யுஜிசி விதிமுைறகளுக்கு முரணானது.

கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில் ஏற்கனவே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், கல்லூரி முதல்வர்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. அதே நேரத்தில் இதுதொடர்பாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர் நேரில் சென்று கேட்டும், கல்லூரி முதல்வர்கள் உரிய பதிலளிப்பதில்லை.  இவ்வாறு அவர்கள் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: