கோட்டை மாரியம்மன் கோயில் விழா : 18 பட்டி மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு, மண் குதிரை வைத்து நேர்த்திக்கடன்

ஓமலூர்: ஓமலூரில், கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 18 பட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஓமலூரில், பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கம்பம் நடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் முன்றுகால பூஜைகள் நடைபெற்று வந்தது.

3ம் புதன்கிழமையான நேற்று அதிகாலை முதலே சுற்றுப்புற பகுதியில் உள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோயிலுக்கு திரண்டு வந்து வழிபட்டனர். பொங்கல் வைத்தும், ஆடுகோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சக்தி கரகம், அக்னி கரகம், பூங்கரகம், மண் குதிரை மற்றும் மண் பொம்மைகளை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. இன்று(28ம் தேதி) மாலை வானவேடிக்கை, வண்டி வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி, ஓமலூர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: