காஷ்மீரில் இறந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை : முதல்வர் வழங்கினார்

சென்னை: பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டார். தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்த சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேணி, சிவசந்திரன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இந்த நிகழ்வின்போது,கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: