சென்னை: உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடத்தில் உள்ளது. உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்திலும், இந்தியா 120வது இடத்திலும் உள்ளது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை BLOOMBERG என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின் நாடு முதலிடத்திலும்,இத்தாலி 2-வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஐஸ்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 119-வது இடத்தில் இருந்தது.