கோவையை சேர்ந்தவர் கதைக்கு ஆஸ்கர் விருது பெண்கள் விழிப்புணர்வு பெற்றால் விருது பெற்றதை காட்டிலும் மகிழ்ச்சி: அருணாச்சலம் முருகானந்தம் பேட்டி

கோவை: ஆஸ்கர் விருது விழாவில் கோவை, பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த  நாப்கின் தயாரிப்பாளர் அருணாச்சலம் முருகானந்தத்தின் கதையை அடிப்படையாக கொண்டு ஈரானிய நாட்டை சேர்ந்தவரால் தயாரிக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கதையை உருவாக்கிய அருணாச்சலம் முருகானந்தம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெண்கள் மாதவிலக்கின்போது படும் அவஸ்தையை விளக்கவே இந்த குறும்படம் எடுக்கப்பட்டது. என்னைப் பற்றி குறும்படம் எடுக்க வந்தவர்களிடம் கிராம பெண்களின் மாதவிலக்கு பிரச்னை குறித்து குறும்படம் எடுக்கலாம் என வலியுறுத்தினேன். நாட்டில் 34 சதவீதம் பெண்கள் மட்டுமே இன்னும் நாப்கின் பயன்படுத்துகின்றனர். 6 லட்சம் கிராமங்களில் மூட நம்பிக்கையால் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதில்லை.

அமெரிக்க பள்ளி குழந்தைகளும், ஈரானிய டைரக்டரும் இதை குறும்படமாக்க முன் வந்த நிலையில் இந்த குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதால் மாத விலக்கு பிரச்னை குறித்து அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். இதில் நடித்த பெண்களை ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்பியுள்ளோம். பெரும்பாலான அமெரிக்க ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் இந்த குறும்படத்தை பற்றி பேசிவந்த நிலையில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. பல மொழி பேசும் இந்த நாட்டில் இதுபோன்ற படங்கள் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இந்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலம் 100 சதவீதம் பெண்கள் நாப்கின் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படும். இது ஆஸ்கர் விருது கிடைத்ததை காட்டிலும் மகிழ்ச்சி அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: