தமிழகத்தை ஆள்வது பாமகவின் இலக்கு அல்ல: அன்புமணி பேச்சு

ஆற்காடு:  தமிழகத்தை ஆள்வது பாமகவின் இலக்கு கிடையாது என்று ஆற்காட்டில் அன்புமணி பேசினார். ஆற்காட்டில்  பாமக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று காலை நடந்தது. பாமக இளைஞர் சங்க தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: பசுமைத் தாயகம் சார்பில் 1996ல் பாலாற்றை பாதுகாப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வாணியம்பாடியிலிருந்து வாலாஜா வரை மூன்று நாட்கள் ராமதாஸ் சைக்கிளில் 5ஆயிரம் இளைஞர்களோடு சென்றார்.  நானும் 2001ல் வேலூர் வரை 32 கிலோமீட்டர் விழிப்புணர்வு பிரசாரம்  செய்தேன். ஆனால், நிலைமை அப்படியே தான் உள்ளது. புல்லூரில் 6 அடியாக இருந்த தடுப்பணை தற்போது 26 அடியாக உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். அதற்கு முதலில் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்கள் தானாக விழித்துக் கொள்வார்கள். ஏனென்றால் இது நமது வாழ்வாதாரம். நமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது நிற்கிறோம். பாமகவின் இலக்கு தமிழகத்தை ஆள்வது கிடையாது.  தமிழகத்தை முன்னேற்றுவதுதான் எங்களது இலக்கு.  ஆட்சிக்கு வந்தால் சீக்கிரமாக முன்னேற்றலாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே எவ்வளவோ நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: