5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அரசாணை பிறப்பிக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: தமிழக பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து  எந்த  அரசாணையும் பிறப்பிக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவது குறித்து அரசுதான் முடிவு செய்யும். இதை தயார்படுத்துவது மட்டுமே பள்ளிக்கல்வித்துறை. இதற்கான அரசாணையை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை.  அரசு பள்ளியில் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பது குறித்த வழக்கில் நீதிபதிகள் கூறும் கருத்திற்கேற்ப முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.

அனைத்து பள்ளியிலும் மாலை நேரத்தில் மாணவர்கள் விளையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான காலிப்பணியிடங்கள் குறித்தும், பள்ளியில் உள்ள இடவசதிக்கேற்ப என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வரலாம் என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார். அச்சம் வேண்டாம்:  ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், `5 மற்றும் 8ம் வகுப்புக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு இல்லை. பெற்றோர்களும், மாணவர்களும், இதற்காக அச்சப்படவோ, குழப்பம் அடையவோ தேவை இல்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: