காங்கயம் அருகே விபத்து டேங்கர் லாரி-பைக் மோதி வாலிபர் பலி: 5 மின்கம்பங்கள் சேதம்

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து ஈரோடு நோக்கி டேங்கர் லாரி ேநற்று இரவு சென்று  கொண்டிருந்தது. லாரியை மகேந்திரபிரசாத் (45) ஓட்டினார். காங்கயம் சென்னிமலை சாலை திட்டுப்பாறை அருகே சென்றபோது காங்கயம் பாரதியார் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார்(23), காங்கயம் வாய்க்கால்மேடு தீபக்(19) இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். திடீரென லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் நிலை தடுமாறிய லாரி சாலையில் இருந்த 5 மின் கம்பத்தை உடைத்துகொண்டு தாறுமாறாக ஓடி சென்று நின்றது. இதில் பைக் ஓட்டி வந்த தினேஷ்குமார் சம்ப இடத்திலேயே பலியானார்.

தீபக் காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரி மின்கம்பத்தில் மோதியதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: