இன்று உலக தாய்மொழி நாள்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி,  ‘உலக தாய்மொழி நாள்’ என அறிவிக்கப்பட்டு, அதற்கிணங்க ‘உலகெங்கிலும் தாய்மொழி நாள்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலகின் மூத்த மொழியாகிய நம் தமிழ்மொழியை போற்றிடும் வகையில் உலக தாய்மொழி நாளான இன்று, தமிழ் மொழியின் சிறப்பை இனிவரும் இளைய தலைமுறையினர்அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ‘உலகத் தாய்மொழி நாள்’ பிப்ரவரி 21ம் தேதி அன்று, ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் நடத்தி கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் ‘உலக தாய்மொழி நாள்’ தமிழ் வளர்ச்சி துறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  அரசு செயலாளர் முன்னிலையில் இன்று, சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள, அண்ணா கருத்தரங்க கூடத்தில் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: