கிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.4 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களிலும், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 8 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுலகம் மற்றும், டிஎஸ்பி கண்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர நில அபகரிப்பு பிரிவிற்கு டிஎஸ்பி கண்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை அசோக் நகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  சார்பதிவாளர் சுமதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அலுவலகத்தில் 75 ஆயிரம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலுல் திருச்சங்கோடு, ஓசூர், கோபி செட்டிப்பாளையம், செங்கம் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை திடீரென சோதனை நடத்தினர். மேலும் லஞ்சம் வாங்கியுள்ள அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: