ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தற்காலிகமானது என்றும், அதிமுக அரசு  இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டிவிட்டரில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு டெக்னிக்கலாக இருக்கிறது. தேசிய பசுமை பசுமை தீர்ப்பாயத்துக்கு ஜூடிஜியல் ரிவியூ என்ற அடிப்படையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை. வேதாந்தா உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேதாந்தா குழுமம் நாட்டின் மிக முக்கியமான உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளது என்றும்,

ஆலை மூடப்பட்டு வெகுநாட்கள் ஆகிறது என்பதால் உயர் நீதிமன்றத்தை வேதாந்தா நிறுவனம் அணுகலாம் என்றும், அப்படி உடனடி நிவாரணம் வழங்குவதற்கு விரைந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடலாம் என்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு தற்காலிகமானது. நான் இந்த  ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்திவருகிறேன். இனியாவது அதிமுக அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: