பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், மக்களை பாதுகாக்க அவசரகால செயல் திட்டம் தீவிரம் மின்சார மதகுகள், ஆட்டோமெடிக் எச்சரிக்கை கருவி

சென்னை: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணைகளில் அவசரகால செயல் திட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பெரும்பாலான அணைகள் தனது முழு கொள்ளளவை இழந்தும், கரைகள் பலவீனமடைந்தும் காணப்படுகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் அல்லது கடும் மழையின்ேபாது அணைகள், பயிர்கள், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். இதைதொடர்ந்து 68 அணைகளில்  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் ₹745 கோடி செலவில் தற்போது புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது 50க்கும் மேற்பட்ட அணைகளில் புனரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதாவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள், வரத்துக்கால்வாய்களை சரி செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தற்போது அணைகளுக்கு அவசர கால செயல் திட்டம் ஒன்றை உருவாக்க மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது. தமிழகத்தில் தற்போது, அதிகப்படியான தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றும் போது  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏற்கனவே திட்டம் ஒன்று  உருவாக்கப்பட்டது.

அதே நேரத்தில் அணைகள் உடைந்தால் என்ன செய்வது, அணை நிரம்பி ஆற்றுப்படுகையில் தண்ணீர் அதிகப்படியான வழிந்தோடினால் என்ன செய்வது என்பது தொடர்பான செயல் திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து அணைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அந்த செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது வரை 40 அணைகளில் அவசர கால நடவடிக்கை எடுப்பது தொடர்பான செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள அணைகளில் அந்த திட்டத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை வரும் 2020க்குள் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘அணைகளில் ஒரே நேரத்தில் தண்ணீர் வரும் பட்சத்தில், அதை கையாள்வதற்கு அணைகளின் திறன் இருக்க வேண்டும். அதற்காக, அணைகளை பலப்படுத்தும் நடவடிக்ைக நடந்து வருகிறது. மேலும், அணைகளில் தண்ணீர் நீர்வரத்து அதிகரிக்கும் போதும், அணைகளில் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவில் அதிகரிக்கும் போது, எச்சரிக்கை செய்வதற்கான தானியங்கி கருவிகள் பொருத்தப்படுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் மதகுகள் நிறுவப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் இயக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை வரும் 2020க்குள் முடிக்கப்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: