சிஆர்பிஎப் வீரர்களுக்கு விஐடியில் மலரஞ்சலி

வேலூர்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வேலூர் விஐடியில் நடைபெற்றது. அப்போது, விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் மலர்தூவி அஞ்சலி செலுத்தி பேசுகையில், ‘நமது படைவீரர்கள் 40 பேர் வெடிக்கு பலியான சம்பவம் நாட்டிலும், உலகளவில் உள்ள மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வீரர்கள் இமயமலைப்பகுதியில் கடுமையான பனியையும் பொருட்படுத்தாமல் எல்லையை பாதுகாத்து வருகின்றனர்.

இந்திய நாடு பல தரப்பட்ட மக்களை கொண்டது. பிறப்பால், மொழியால், மதத்தால், இனத்தால் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற கொள்கை உடையவர்கள். நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு தக்க பதிலடி நாம் தர வேண்டும். பலியான நமது படைவீரர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்’ என்றார். நிகழ்ச்சியில் விஐடி செயல் இயக்குனர் சந்தியாபெண்ட்டரெட்டி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் விஐடி பாதுகாப்பு படையினர், என்.சி.சி.படையினர், பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: