வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மவுன அஞ்சலி: அண்ணாமலையார் கோயிலில் மோட்ச தீபம்

திருவண்ணாமலை: காஷ்மீரில் கார் குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 40 வீரரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாட்டுக்காக உயிர்நீத்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள ஈசான்ய மைதானத்தில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து, முஸ்லிம் கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏற்றினர். அதையொட்டி, ஈசான்ய மைதானத்தில், மூவர்ண்ண கொடியுடன் கூடிய இந்திய வரைபடத்தை மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர்.உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், மகளிர் திட்ட அலுவலர் தேன்மொழி, பிடிஓகள் சஞ்சீவிகுமார், பிரகாஷ், பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சரவிளக்குகள் அருகே, சிவாச்சாரியார்கள் மோட்சதீபம் ஏற்றி, 40 வீரர்களின் ஆன்மா மோட்சம் அடைய வேண்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: