துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவா (25), அன்பரசன் (24). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இவர்களுக்குள் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கானத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஏட்டு முருகராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்து, கலைந்து செல்லும்படி கூறினார். ஆனாலும், அவர்கள் சண்டை தொடர்ந்தது. இதையடுத்து ஏட்டு முருகராஜ், அங்கு நடந்த காட்சிகளை ஆதாரத்திற்காக தனது செல்போனில் படம் பிடித்தார்.