டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தகுதி பெற்றோர் பட்டியல் வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி பல்வேறு நிலைகளில் நடந்த தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு, முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், உடல் தகுதி தேர்வு  / நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு / முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

14 உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு 2018 ஜூலை 28, அக்டோபர் 4ம் தேதிகளில் நடந்த தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு தேதி/ சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்,கட்டிடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் பணிக்கு 2018 டிசம்பர் 22ம் தேதி நடந்த எழுத்துத்தேர்வு உள்பட சில தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு/முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: