ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 34 பேர் தேர்வு: தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை

சென்னை: ஐஎப்எஸ் தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 34 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த மையத்தில் படித்த மாணவர் ஜெயகுமரன் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) 110 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து முதல் நிலை, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடந்தது.  தற்போது நேர்முக தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதும் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது:

ஐஎப்எஸ் இறுதி தேர்வான நேர்முக தேர்வில் இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 14 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 89 பேரில் 34 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள். அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தை ஜிவானி கார்த்திக் பிடித்துள்ளார். 4ம் இடத்தை ஜெயகுமரன் பிடித்துள்ளார். மேலும் ஜெயக்குமரன் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். 8ம் இடத்தை திருக்குறள், 9ம் இடத்தை ஆஞ்சல் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பிடித்துள்ளனர். இந்த  மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிபெற்று அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசைக்குள் வந்த மாணவர்கள் ஆவர். இவ்வாறு வைஷ்ணவி சங்கர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: