வேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு!

வாஷிங்டன்: உலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) வேகமாக நகர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிப் பந்தின் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881ம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், இந்த வேகமானது கடந்த சில ஆண்டுகளாக மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது, வட காந்தப் புலம் தற்போது ஆண்டுக்கு, 30 முதல் 40 கி.மீ வரை இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள், அடுத்த ஒரு வருடத்திற்கான துருவங்கள் பற்றிய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வட காந்த துருவம் கடந்த ஒரு வருடத்தில் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டும். வட காந்த துருவம் நகர்வதால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் நிலையாக இருக்கும் வழிகாட்டிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புல நகர்வால் வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு ஏற்படும். அதற்குத் தள்ளி இருக்கும் நாடுகள், இப்போதைக்கு இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூமியின் தற்போதுள்ள இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்துவருவது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பூமியை கண்காணிக்க பி.எஸ்.எல்.வி. சி.46...