தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை : மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: காஷ்மீரிலிருந்து செயல்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு இன்று முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டி.யூ.எம் எனப்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பு காஷ்மீர் விடுதலைக்காக 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் யூனுஸ்கான் என்பவரால் துவக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து  பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், காஷ்மீர் விடுதலைக்காக தொடங்கப்பட்ட தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள். வெளிநாட்டு நிதி மூலம் பல்வேறு ஆயுதங்களை வாங்கி குவிக்கிறார்கள். மேலும் பல இளைஞர்களை மூளை சலவை செய்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசவும், செயல்படவும் ஊக்குவித்து தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: