விடைத்தாள் மதிப்பீட்டில் முன்னுரிமை கோரி அண்ணா பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடைத்தாள் மதிப்பீட்டில் முன்னுரிமை அளிக்க கோரி அண்ணாப்பல்கலைக்கழகம் முன்பாக கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  அண்ணாப்பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகளில் 2001ம் ஆண்டு முதல் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு  வருகின்றனர். அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒரு துறைக்கு 10 பேர் என்கின்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்கள் பணியில்  நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த நூறுக்கும்  அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாப்பல்கலைகழக நுழைவு வாயில் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

அப்போது, கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:அண்ணாப்பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி எங்களுக்கு வழங்கப்படவில்லை.  அதேபோல், வினாத்தாள் உருவாக்கும் பணியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு கவுரவ விரிவுரையாளர்கள் தான் காரணம் என்று எங்கள் மீது சக  ஆசிரியர்கள் பொய் புகார் கூறுகின்றனர். உதவி பேராசிரியர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்து வருகிறோம். இதை கண்டித்து நாங்கள்  தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதேபோல், தொகுப்பூதியத்தை மறுசீரமைத்தல், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு  பொறியியல் கல்லூரி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: