சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டில் ஆவின் விற்பனை மையம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

சென்னை: சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டில் ஆவின் விற்பனையை  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில் கத்தார் நாட்டில் ஆவின் விற்பனை மையத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற இந்நிகழ்சியில் ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் குமரன், இந்திய துணை தூதர் பகத், பால் வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், கத்தார் நாட்டின் ஆவின் இறக்குமதியாளர் யூஸெஃப் ஜாபர் அல் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:கத்தார் நாட்டு மக்கள் ஒரு சுவையான பாலை அருந்த வேண்டும் என்று இந்த நாட்டின் மன்னரின் அனுமதியை பெற்று எங்களது ஆவின் பால் விற்பனையை தொடங்கியுள்ளோம். ஆவின் பால் உலகத்தை சுற்றி வரும். அதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.இவ்வாறு பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: