மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மகேந்திர பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் சிறப்புக்காட்சிகள் என்ற பெயரில் ரூ.1000க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் சிறப்பு காட்சிகளால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து மத்திய கலால் வரித்துறை முதன்மை ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: