கும்பகோணம் வீர சைவ மடத்தில் நள்ளிரவில் மோதல்; புதிய மடாதிபதிக்கும், உதவியாளர்களுக்கும் அடி-உதை

கும்பகோணம்: கும்பகோணம் வீர சைவ மடத்திற்குள் பதவி நீக்கம் செய்யப்பட்ட மடாதிபதி ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் புதிய மடாதிபதி உள்ளிட்டோர் காயமடைந்தனர். கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பழைய மடாதிபதி நிலகண்ட தேசிக பரமாச்சாரியார் நள்ளிரவில் ஆதரவாளர்களுடன் மடத்திற்கு திரும்பினார்.

மடத்தின் பூட்டை உடைத்து அவர் உள்ளே நுழைந்தார். புதிய மடாதிபதியைும் அவரது உதவியாளர்களையும் அவர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலகண்ட தேசிக பரமாச்சாரியார் தம்மை பதவி நீக்கம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தாமே மடாதிபதியாக தொடர்வதாகவும் கூறினார்.

தாக்குதலில் காயமடைந்த புதிய மடாதிபதி பசவ முருக தேசிகேந்திர மகா சுவாமிகள் உள்ளிட்ட 3 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் எதிரொலியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் முறைகேடு புகாரால் நீலகண்ட தேசிக பரமாச்சாரியார் நீக்கப்பட்டு புதிய மடாதிபதியாக பசவ முருக தேசிகேந்திர மகா சுவாமிகள் நியமிக்கப்பட்டதே தற்போதைய மோதலுக்கு காரணம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: