அந்நிய செலாவணி மோசடி வழக்கு : சசிகலா மீது குற்றச்சாட்டுகள் பதிவு

சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு கடந்த வந்த பாதை

ஜெ.ஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும், அதற்கு கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும், வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதிலும், விதிகளை மீறி பல்வேறு வகையில் பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.

சசிகலா மீது குற்றச்சாட்டுகள் பதிவு

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளை முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறி ஏற்கனவே பதிவு செய்ததை ரத்து செய்துவிட்டு புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா காணொலி மூலம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

 குறுக்கு விசாரணை செய்ய அனுமதி

இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நீதிபதி மலர்மதி முன்பு ஆஜராகிய அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்புதாக சசிகலா தெரிவித்தார். மேலும் அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை நடத்தும்படி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அந்நிய செலவாணி மோசடி  வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை வரும் 12ம் தேதி குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: