திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 90 சிலைகள் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சிலை பாதுகாப்பு மையத்தில் கடந்தாண்டு அக் 21, 22 ேததிகளில் முதல் கட்ட சோதனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். 2ம் கட்ட   சோதனை நவம்பர்   1ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. 2 கட்ட சோதனைகளிலும் தஞ்சை,  திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த கோயில்களின் 513 சிலைகள்  சோதனை செய்யப்பட்டன.  இந்நிலையில், 3ம் கட்ட சோதனை நேற்று முன்தினம் துவங்கியது. தொல்லியல்  துறை சார்பாக தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 12 அலுவலர்களும்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  இன்ஸ்பெக்டர்  இளங்கோவன் தலைமையில் 15  போலீசாரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 91 சிலைகள் ஆய்வு  செய்யப்பட்டது. நேற்று 90 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இன்றும்  தொடர்ந்து ஆய்வு நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: