நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை: நடிகை கரீனா கபூர் பதில்

போபால்: நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்தி நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார். தற்போதைய மத்திய அரசின் ஆட்சி காலம் சில மாதங்களில் முடியவுள்ள நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில்  சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் இந்தி நடிகை கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்துள்ளனர். போபால் மக்களவைத் தொகுதியில் கரீனா கபூரை போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் கவுடு சவுகான், அனீஸ் கான் பேசுகையில், போபால் தொகுதியில் ஸ்திரமாக காலூன்றியுள்ள பா.ஜனதாவை தோற்கடிக்க கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்றும் கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள்  அதிகமாக உள்ளனர். அவர்கள் கரீனாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்றனர். பாஜகவின் கோட்டையாகத் திகழும் போபாலில், காங்கிரஸ் 1984-ல் இருந்து 25 வருடங்களாக வெற்றி பெறவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தலில் போட்டி என வந்த தகவலை மறுத்துள்ள கரீனா கபூர், நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை  என்று தெரிவித்துள்ளார். என்னுடைய கவனம் முழுவதும் திரையுலகில் மட்டுமே இருக்கிறது, அது அப்படியே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: