மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு : டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்

லண்டன் : கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு  செய்யப்பட்டதாக மின்னணு இயந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து ஸ்கைப் மூலம் நேற்று பேட்டி அளித்த அவர், 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களை வடிவமைத்த குழுவில் தானும் இருந்துந்ததாக குடிப்பிட்டார்.  

அப்ப்போது இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும் அதனை தெரிந்துக்கொண்டு மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்து பேரில் கொல்லப்பட்டதாக அவர் கோரினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில்  அமைச்சர் கோபிநாத் முண்டே கொள்ளப்பட்டது கொலை என்று வழக்குப்பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரி தனது குழுவினர் என்று மேலும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் தான் அச்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியவில் நடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் இன்று புகார் அளித்துள்ளது. மேலும் இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து சயத் ஷுஜா என்பவர் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை செய்யவில்லை, வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைப்பிலும் பங்குபெறவில்லை என எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: