18 தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து ஏப்.24-க்குள் முடிவெடுக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்

மதுரை: தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக  உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன் ஜன.4-ம் தேதி மனு தாக்கல்  செய்தார். 18 தொகுதிகளின் 27 லட்சம் வாக்காளர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதாகவும், இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த கோர்ட்டு அறிய  விரும்புகிறது” என்றனர். இருத்தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்  உத்தரவிட்டனர். விசாரணையை இன்று 22-தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய ஏப்ரல் வரை அவகாசம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து  தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை செயலர் ஜனவரி 8-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். மேலும் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24- தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல்  ஆணையம் உறுதி அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: