நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு: மாவட்ட ஆட்சியர்கள் தீவிரம்

நாமக்கல்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதற்காக தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மையக்கப்பட்ட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் ஆணையருமாக ஆசியா மரியம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் போன்றவற்றை இறுதி செய்யும் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் முடிந்தவுடன் தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தை கையாலுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: