உலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வாரணாசி: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 15-வது பர்வாசி பாரதிய திவாஸ் தொடங்கியது. இந்த மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வந்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றை உருவாக்க முயற்சிப்பதாக கூறினார். சூரிய மின்சக்தி உற்பத்தி உள்பட பல துறைகளில் உலக அளவில் இந்தியா முன்னோடியாக உள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு திட்டங்களில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைவதாகவும் எஞ்சிய 85 சதவீதம் வீணாவதை தடுக்க முடியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்கு சான்றாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் பேசுகையில், பிரதமர் மோடியின் திறன் இந்தியா, பெண் குழந்தைகளைக் காப்போம், மாற்று எரிசக்தி போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தகுந்தவை. மொரிஷியஸில் அடுத்த ஆண்டு போஜ்புரி பண்டிகையும், அடுத்த மாதம் பகவத் கீதா மகோத்சவமும் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: