×

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39% உயர்வு

தாவோஸ்: இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த நிறுவனம் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டு கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018ம் ஆண்டு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாள் ஒன்றுக்கு 2,200 கோடி அதிகரித்துள்ளது. உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு 250 கோடி டாலர் என, 12 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியர்களில் 13.6 கோடி பேர் 2004ம் ஆண்டு முதல் ஏழையாகவே உள்ளனர் நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 77.4 சதவீதம், இந்தியாவில் கோடீஸ்வரர்களாக உள்ள 10 சதவீதம் பேரிடம் உள்ளது.

ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களிடம் 51.53 சதவீத சொத்து உள்ளது. கடந்த ஆண்டில் 18 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 28 லட்சம் கோடியை ஒட்டியுள்ளது.  60 சதவீதம் மக்களிடம் 4.8 சதவீத செல்வளம் உள்ளது.  இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு 2,08,166 கோடி செலவிடுகின்றன. ஆனால், இந்திய பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் மட்டும் 2.8 லட்சம் கோடி என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : billionaires ,Indian , Indian billionaires,39% higher
× RELATED சொல்லிட்டாங்க…