தமிழகத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது: நிர்மலா சீதாராமன் பேட்டி

திருச்சி: தமிழ்நாட்டுக்கு குறைவின்றி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ போலீசில் பெண்களுக்கு 20% ஒதுக்க உத்தரவு  வழங்கப்பட்டது. திருச்சியில் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், திருச்சி  மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்புத் துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்றும்  தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழில் முதலீட்டாளர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். அதனை மாநில அரசு பயன்படுத்த வேண்டும் என்றார். தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லாவிட்டாலும், தமிழகத்திற்கு ஒரு  குறையும் இல்லாமல் திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது என்றும்  டிஃபென்ஸ் எக்ஸ்போ, டிஃபென்ஸ் காரிடார் திட்டத்தை தமிழகத்திற்கு வழங்கியவர் பிரதமர் மோடி தான் என்றார்.

ராணுவ போலீசில் 20% வரை பெண்களை சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ளோம் என்றும் ரஃபேல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளோம், பதில்  சொல்லும்போது, அதை கேட்காமல் சிலர் பேப்பரில் ஏரோபிளேன் விட்டார்கள்; சிலர் போட்டோ எடுத்தார்கள் பதிலை கேட்காமல், பதிலில் திருப்தி இல்லை என்று கூறுவதா?, காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் ஒன்று  பேசுவார்கள், வெளியில் வந்து வேறு ஒன்றை பேசுவார்கள். மாற்றி மாற்றி பேசுபவர்களுக்கு பதில் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். ரபேல் விவகாரத்தில் சரியான புரிதல் இல்லாமல் மத்திய அரசை விமர்சனம்  செய்கிறார்கள் என்றும் திறமையுள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் தவறில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: