மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்  வழங்கும் வரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:  தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் கடந்த 2012ல் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பேர் ஆசிரியர்களாக தொடக்க கல்வித்துறையில் நியமிக்கப்பட்டனர். முதலில் இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கினர். பின்னர் ரூ.7500 என ஊதியம் வழங்கி வருகின்றனர். இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியுள்ளனர். தற்போது 12 ஆயிரம் பேர் தான் இந்த பணியில் நீடிக்கின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கேட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை  ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியர்களுக்கும் ரூ.45700 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 7வது ஊதியக் குழுவில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு என்று அரசாணை வெளியிட்டும் இது வரை தமிழக அரசு வழங்கவில்லை. ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் அவர்களுக்கு பதிலாக எங்களை பள்ளிகளில் பயன்படுத்திக் கொண்ட அரசு எந்த ஊதியமும் வழங்கவில்லை. எல்லா வகையிலும் அரசுக்கு பயன்பட்டு வரும் எங்களை ஊதிய உயர்வுடன் சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் மற்றும் தொழிலாளர் சேமநிதி, இஎஸ்ஐ, போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, விடுமுறை சலுகைகள் உள்ளிட்ட அடிப்படை சலுகைகள் ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: