மெரினா கடற்கரையில் 1000 வாட்ஸ் திறனில் 30 எல்இடி விளக்குகள்

சென்னை: மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளில் 1000 வாட்ஸ் திறன் எல்இடி விளக்குளை அமைக்கமாநகராட்சி முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக அதிகாரகள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி  நடந்து வருகிறது. இந்த பணி பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். அதன்படி மெரினா கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற  வேண்டும். ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அதிக திறன் கொண்ட விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மெரினா கடற்கரையில் உள்ள 15 உயர்கோபுர மின் விளக்குகளில் 900 முதல் 1000 வாட்ஸ் திறன் கொண்ட 30 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு ரூ.43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: