சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஜினியர் குடும்பத்துக்கு 43 லட்சம் இழப்பீடு: அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை வடபழனி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீஸ்நக். சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2016ல் இசிஆர் சாலையில் இரு சக்கர  வாகனத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தமிழக அரசின் எஸ்.இ.டி.சி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சீஸ்நக்கின் பைக்கின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விபத்து ஏற்பட்ட அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வாலிபரின் தாய் லட்சுமி, தந்தை வெங்கட்டரமண மூர்த்தி மற்றும் தம்பி ஆகியோர் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கு நீதிபதி ஐயப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விபத்தில் உயிரிழந்த வாலிபர், தனியார் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். மேலும் அவர் மாதம் ₹37 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக  கூறப்படுகிறது. அவரது இழப்பு பெற்றோருக்கு பேரிழப்பாகும்.

எனவே உயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு ₹43 லட்சத்து 40 ஆயிரத்து 153 இழப்பீடாக வழங்க கோரி மாநில விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: