குப்பை, கழிவு கொட்டுவதை தடுக்கும் வகையில் மணலி ஏரிக்கரையில் வேலி அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: தினகரன் செய்தி எதிரொலியாக, மணலி ஏரியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மணலி ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் ஆகாயத்தாமரை வளர்ந்து சேறும் சகதியுமாக தூர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் சிலர் தார், ஆயில் மற்றும் ரசாயன கழிவுகளை இந்த ஏரியில் விடுவதால் ஏரி நீர் மாசடைந்து வந்தது.

இந்த நீரை பருகும் ஆடு, மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, ஏரியில் கழிவுகள் விடப்படுவதை தடுக்கவும், தூர்வாரி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த மாதம் தனியார் கம்பெனி சார்பில் ஆயில் கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டப்பட்டதால், நீர் கருப்பாக மாறியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 12ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து கால்

நடைத்துறை அதிகாரி குப்புசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 16ம் தேதி  ஏரியில் படிந்துள்ள தார்  மற்றும் ஆயில் கழிவுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஏரியில்  குப்பை கழிவுகள் கொட்டுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் ஏரிக்கரையில் இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 2 தினங்களுக்கு முன் மணலி ஏரிக்கரையில்  நீண்ட தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும் ஏரியில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டக்

கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை  அறிவிப்பு பலகை அதிகாரிகள் வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏரியை தூர்வாருவதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஆவண பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடரும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: