ராசி மணலில் அணை கட்டுவதற்கு வனத்துறை அனுமதி பெற முயற்சிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

தஞ்சை: ராசி மணல் அணை கட்டுவதற்கு மத்திய அரசின் வனத்துறை அனுமதி பெற தமிழக அரசு முயற்சியெடுக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்  கூறினார்.தஞ்சையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிதோண்டி புதைப்பதாகும்.

அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்கு தான் அனுமதி கொடுத்துள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு எடுத்த கூறி ஆய்வுக்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.  தமிழகம் வழியாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்க கர்நாடகா- தமிழக எல்லையில் உள்ள ராசி  மணல் என்ற இடத்தில் அணை கட்ட மத்திய அரசின் வனத்துறை அனுமதி பெற தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: